January 10, 2017
tamil.samayam.com
பிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை 4வது முறையாக, கிறிஸ்டியனோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, ரியல் மேட்ரிட் கால்பந்து அணிக்காக, கிளப் போட்டிகளிலும் விளையாடிவருகிறார். அவர் சர்வதேச கால்பந்து அரங்கில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். இதன்படி, 2016ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு, ரொனால்டோ பெயரை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்தது.
இதற்கான விருதை நேற்று அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதுக்கான போட்டியில், மற்றொரு சர்வதேச கால்பந்து வீரரான மெஸ்ஸி, சில வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியதும் குறிப்பிடத்தக்கது.
பிஃபா சிறந்த வீரர் விருதை 4வது முறையாக ரொனால்டோ பெற்றுள்ளார். அதேசமயம், அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி 5முறை இந்த விருதை பெற்று, சாதனை படைத்துள்ளார். அவரை விரைவில் எட்டிப்பிடிப்பேன் என்று, ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.