February 16, 2017
tamilsamayam.com
முன்னாள் இந்திய கேப்டன் தோனி, தனது செல்ல மகளுடன் தவழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. சர்வதேச அளவில் ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர் தோனி. சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெற்ற இவர், கோலி தலைமையில் தற்போது ஒருநாள், டி-20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இவர் தனது மகள் ஜிவாவுடன் சேர்ந்து தவழ்ந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.