November 9, 2018
தண்டோரா குழு
ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முகமது கைஃப் நியமிக்கப்பட்டு
உள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார்.அவருக்கு உதவியாக ஜேம்ஸ் ஹோப் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில்,தற்போது 3-வது பயிற்சியாளராக முகமது கைஃப் சேர்க்கப்பட்டுள்ளார்.முகமது கைஃப் இதற்கு முன் கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் பணியாற்றியிருந்தார்.அண்மையில் ரஞ்சிக்கோப்பை தொடருக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற சத்தீஸ்கர் அணிக்கு ஆலோசகராக முகமது கைஃப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.