March 21, 2017
tamilsamayam.com
இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்குவேன் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய ஹசாரே டிராபி தொடரில், தமிழக அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் அடித்து அசத்தினார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,
விஜய் ஹசாரே டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது அவ்வளவு எளிதாக இல்லை. கேப்டன் விஜய் சங்கர் உட்பட 49 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தோம். அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடுவது எனது வாழ்நாள் கனவு, ஒரு சில தவறால் எனது இடத்தை பறிகொடுத்துவிட்டேன். இருந்தாலும் எனக்கு தன்நம்பிக்கையும், தைரியமும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எப்படியும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்,’ என்றார்.