April 25, 2017
tamilsamayam.com
டெல்லி அணியின் இளைஞர்கள் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 லீக் போட்டிகளில் டெல்லி அணி 2 வெற்றி, 4 தோல்விகள் என 6வது இடத்தில் உள்ளது.
லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே, பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கு முன்னேறும். இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட், டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிராவிட் கூறுகையில்,
‘ஐபிஎல் கிரிக்கெட் தற்போது பாதி நிலையே எட்டியுள்ளது. அதனால் தற்போது டெல்லி அணி 6வது இடத்தில் உள்ளதைப்பற்றி விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால், ரன்ரேட் அடிப்படையில் பார்த்தால், கொல்கத்தா அணிக்கு அடுத்தபடியாக டெல்லி அணியே உள்ளது. டெல்லி அணி இளைஞர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் இதை நிச்சயமாக மாற்றுவார்கள்.’ என்றார்.