October 10, 2017
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்கள் கண்டிப்பாக உடல்தகுதியை நிரூபிக்கும் யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனையடுத்து, அவர்கள் உடல்தகுதித் தேர்வில் தோற்றுவிட்டதாக தகவல் பரவியது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் பெற யோயோ டெஸ்ட் எனப்படும் உடற்தகுதி சோதயை வெற்றிகரமாக பூர்த்திசெய்ய வேண்டும். இதற்கு எந்த வீரரும் விதி விலக்கு அல்ல. கண்டிப்பாக இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ உறுதியாக அறிவித்துள்ளது.
அண்மையில், நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான யோயோ சோதனையில் விராட் கோலி அதிகபட்சமாக 21 மதிப்பெண் பெற்றார் என்றும் யுவராஜ் சிங் 16 மதிப்பெண் மட்டுமே பெற்றார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் 19.5 மதிப்பெண் எடுத்தால்தான் யோயோ தேர்வில் வெற்றி பெற முடியும்.
இதில் யுவராஜ், ரெய்னா ஆகியோர் தவறிவிட்டதால் இந்திய அணியில் இடம் பறிபோகிவிட்டது என்று கூறப்படுகிறது.