July 31, 2018
tamilsamayam.com
இங்கிலாந்து – இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இது இங்கிலாந்து விளையாடும் 1000வது டெஸ்ட் கிரிக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்க உள்ளது.
இங்கிலாந்தின்,பர்மிங்காம் நகரில் உள்ள எட்க்பஸ்டன் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி,இங்கிலாந்து விளையாடும் 1000வது டெஸ்ட் கிரிக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி,5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர் கொள்கிறது.பேட்ஸ்மேன்களில் கோலி 2வது இடத்திலும்,பவுலர்களில் ஜடேஜா, அஸ்வின் முறையே 3,5வது இடத்தில் உள்ளனர்.மேலும் புஜாரா,குல்தீப் யாதவ்,ஹர்திக் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இந்தியாவை சிறப்பான வெற்றி பெற உதவுவார்கள் என நம்பலாம்.
இந்த முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு 1000வது டெஸ்ட் போட்டியாகும். இதற்கு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது.இங்கிலாந்து அணி முதன் முறையாக 1877ம் ஆண்டு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது.999 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 357 வெற்றி,297 தோல்வி மற்றும் 345 போட்டிகளை டிரா செய்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் எட்க்பஸ்டன் மைதானத்தில் 50 போட்டிகளில் விளையாடி 27 வெற்றி, 15 போட்டிகளை டிரா செய்துள்ளது.