November 14, 2018
தண்டோரா குழு
ஒருநாள் போட்டிக்கான ICC தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.ICC ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் பேட்டிங் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் 871 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா உள்ளார்.பட்டியலில் கடந்த முறை 9-வது இடம் பிடித்திருந்த ஷிகார் தவான் தற்போது 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.அதைபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி 20வது இடத்தினை பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 841 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாவது இடத்தில் 788 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியின் ரசித் கானும்,723 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் 3-வது இடத்திலும் உள்ளனர்.அதைபோல்,683 புள்ளிக்களுடன் யுவேந்திர சாஹல் 5-வது இடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் 126 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி முதல் இடத்திலும் இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.ஆல்ரவுன்டர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரசித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.இப்பட்டியலில் இந்தியாவின் 4 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.227 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் 14-வது இடத்திலும்,222 புள்ளிகளுடன் ரவிந்திர ஜடேஜா 16-வது இடத்திலும்,220 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்ட்யா 18 இடத்திலும்,215 புள்ளிகளுடன் கேதர் ஜாதவ் 20-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.