September 25, 2018
தண்டோரா குழு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.
15வது ஆசிய கிரிக்கெட் போட்டி தொடர் துபாயில் நடந்து வருகிற்து.ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,ஹாங்காங், ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்றன.
இதில் லீக் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா,பாகிஸ்தான்,வங்களாதேஷம்,ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் “சூப்பர் 4 சுற்று”க்கு முன்னேறின.இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்) எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது.
ஏற்கனவே இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளதால் இப்போட்டியில் முக்கிய வீரர்களான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார்,பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுள்ளது.
ரோகித் சர்மா இன்றைய போட்டியில் பங்கேற்காததால் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.இதனால்,நீண்ட இடைவேளைக்கு பிறகு டாஸ் போடா தோனி வந்தார்.இதில்,டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இதன்மூலம் 200-வது முறையாக ஒருநாள் போட்டிக்கு தோனி தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.