• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மித்தாலி ராஜ் விவகாரம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி சர்ச்சை பேச்சு

November 26, 2018 தண்டோரா குழு

டெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 6 வது மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இத்தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.இப்போட்டியில் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டார். இதற்கிடையில்,இத்தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,இதுதொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி,தானும் இதேபோல் நல்ல நிலையில் விளையாடிய போது அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள டோலிகஞ்ச் க்ளப்பில் பேசிய அவர்,

“மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.இது நடப்பதுதான்.நான் நன்றாக விளையாடிய காலத்தில் கேப்டனாக இருந்தபோது என்னையும் இப்படித்தான் வெளியே உட்கார வைத்தார்கள்.இப்போது மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதைப் பார்த்த போது,‘வெல்கம் டு தி கி குரூப்’ என்று கூறினேன்.பைசலாபாத்தில் என்னை இப்படி உட்கார வைத்தார்கள்.அப்போது ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தாலும் க்ரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது என்னை 15 மாதங்கள் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கவில்லை.வாழ்க்கையில் இப்படியும் நடக்கும்.மிகச் சிறந்தவர்களுக்கு சில வேளைகளில் கதவு மூடப்படும்.மிதாலி ராஜுக்கு இது முடிவு அல்ல,அவரது பயணம் இதோடு முடிந்துவிடாது” என தெரிவித்துள்ளார். கங்குலியின் சர்ச்சையான பேச்சு இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க