August 13, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.ஆன்டர்சன் வேகத்தில் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வோக்ஸ் சதம்(137),பேர்ஸ்டோவ் அரைசதம்(93) கைகொடுக்க 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.இதையடுத்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழக்க 130 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து அணி சார்பில் ஆன்டர்சன்,பிராட் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி தொடரில் 2-0 ன முன்னிலை வகிக்கிறது.