• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லார்ட்ஸ் டெஸ்ட்: மழையினால் 2ம் நாள் ஆட்டம் நிறுத்தம்

August 10, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்து- இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளான இன்று மீண்டும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.ஆனால் காலை போட்டி நடைப்பெற இருந்த லண்டன்,லார்ட்ஸ் மைதானம் பகுதியில் காலை முதல் மழை பெய்து வந்தது.இதன் காரணமாக நடுவர்கள் முதல் நாள் போட்டியை கைவிடப்படுவதாக அறிவித்தனர்.இதையடுத்து,இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து,தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கினர்.முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.

பின்னர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஏழாவது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.இதற்கிடையில்,6.3 ஓவர் வீசப்பட்ட நிலையில்,மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.தற்போதய நிலவரப்படி இந்திய அணி 6.3 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் படிக்க