January 24, 2018
தண்டோரா குழு
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 54வது பந்தில் முதல் ரன் எடுத்த புஜாராவுக்கு வீரர்கள் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர்.
தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று (ஜன 24) 3-வது டெஸ்ட் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஒயிட்வாஷை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இதில், டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்கு பதில் ரஹானேவும், அஸ்வினுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய புஜாரா, விராட் கோலி நிதானமாக விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையில், மிகவும் நிதானமாக விளையாடிய புஜாரா தாம் எதிர்கொண்ட 54வது பந்தில் தான் முதல் ரன் எடுத்தார். இதானல், புஜாரா முதல் ரன் எடுத்தாலும் மாற்ற இந்திய வீரர்கள் சிரித்துக்கொண்டே எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். இதனைப்பார்த்த புஜாராவும் புன்னைகைத்தார்.