January 24, 2018
தண்டோரா குழு
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று(ஜன 24) 3-வது டெஸ்ட் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஒயிட்வாஷை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்கு பதில் ரஹானேவும், அஸ்வினுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதைபோல் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேசவ் மகாராஜ் பதிலாக அண்டிலே பெலுக்வாயா சேர்க்கப்பட்டுள்ளார்.
அணிகள் விவரம்
தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஹசிம் ஆம்லா, வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், பிலாண்டர், கேசவ் மகாராஜ், ரபாடா, மோர்கல், நிகிடி, கிறிஸ் மோரிஸ் அண்டிலே பெலுக்வாயா.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல்,, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா.