October 23, 2017
தண்டோரா குழு
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்களின் முழு விவரம்:
கேப்டன் விராட் கோலி, குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா, இசாந்த் சர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், முரளி விஜய், ஹர்திக் பாண்டியா