February 8, 2017
tamilsamayam.com
யாரையும் ஆளை வைத்து எடைபோடக்கூடாது என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (பிப்ரவரி 23-27) புனேயில் நடக்கிறது. அடுத்த 3 போட்டிகள் பெங்களூரு (மார்ச் 4-8), ராஞ்சி (மார்ச் 16-20), தரம்சாலாவில் (மார்ச் 25-29) இடங்களில் நடக்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன், ஒரு பயிற்சிக்காக இந்திய அணி, கத்துக்குட்டி வங்கதேச அணியை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒரே ஒரு டெஸ்டில் எதிர்கொள்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, வெறித்தனமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியது:
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கு முச்சதம் அடித்த கருண் நாயருக்காக , கடந்த சில ஆண்டுகளாக கடினமாக உழைத்த ரகானேவை மறந்துவிடக்கூடாது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்காக, இரண்டு ஆண்டு உழைப்பை வீணாக்க கூடாது. ரகானேவுக்காக கருண் நாயர் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். அதற்காக ரகானே வாய்ப்பை பறித்துவிட்டார் என அர்த்தமில்லை. யாரையும் ஆளை வைத்து எடைபோடக்கூடாது.
இவ்வாறு கோலி கூறினார்.