January 27, 2017
tamilsamayam.com
டி-20 அரங்கில் இந்திய அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றியது. இதன் பின் இரு அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி கான்பூரில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, பேட்ஸ்மேன்கள் வெடிக்க தவற, 20 ஓவரில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் மார்கன் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி, 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி -20 அரங்கில் இந்திய அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற பெருமை பெற்றது இங்கிலாந்து அணி. இதற்கு முன் நியூசிலாந்துடன் இந்திய அணி 5 போட்டியில் தோல்வியடைந்தது.
தவிர, டெஸ்ட் அரங்கில் தோல்வி யை சந்திக்காத கோல், தனது டி- 20 பயணத்தை தோல்வியுடன் துவங்கினார். இதன் மூலம் டி-20 போட்டியை தோல்வியுடன் துவங்கிய முதல் இந்திய கேப்டன் என்ற சோகமான சாதனை படைத்தார் கோலி.
இதோ போல தோனி பங்கேற்ற முதல் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. சேவக், ரகானே , ரெய்னா ஆகியோர் தங்களது முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கினர்.