October 25, 2018
தண்டோரா குழு
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட்,5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.அதைப்போல் இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது.இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.2 வது போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது.இந்த அணியில் வேகபந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அணி விபரம் வருமாறு:
கோலி,ரோகித் ஷர்மா,ஷிகர் தவான்,அம்பதி ராயுடு,MS டோனி,ரிசாப் பன்ட்,ரவிந்திர ஜடேஜா,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஷ்வர் குமார்,ஜாஸ்பிரிட் பும்ரா,கலீல் அகமது,உமேஷ் யாதவ்,KL ராகுல்,மனிஷ் பாண்டே