October 9, 2018
தண்டோரா kulu
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள்,டி-20 போட்டிகளில் பங்கேற்கும் விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி,2 டெஸ்ட்,5 ஒருநாள்,3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ்,272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஒருநாள்,டி-20 போட்டிகளில் பங்கேற்கும் விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.இந்த அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் சுனில் நரேனும் அணியில் இடம் பெறவில்லை.மேலும்,ஒருநாள் போட்டிக்கு ஹோல்டரும்,டி-20 அணிக்கு பிராத்வெயிட்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:ஒருநாள்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்),பாபின் ஆலன்,சுனில் ஆம்புரூஸ்,தேவேந்திர பிசோ,சந்தர்பால் ஹேட்மேயர்,சாய் ஹோப்,அல்ஜாரி ஜோசப்,எவின் லீவிஸ்,ஆஸ்லே நர்ஸ்,கீமோ பால்,ரோவ்மான் பாவெல்,கீமர் ரோச்,மார்லன் சாமுவேல்ஸ்,ஆஸ்னே தாமஸ்.
டி-20:
கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்),பாபின் ஆலன்,டேரன் பிராவோ,சிம்ரான் ஹேட்மேயர்,எவின் லீவிஸ்,ஒபேத் மெக்காய்,ஆஸ்லே நர்ஸ்,கீமோ பால்,காரே பெர்ரி,கெய்ரன் போலார்டு,ரோவ்மான் பாவெல்,தினேஷ் ராம்டின்,ஆண்டிரு ரசல்,செர்பானே ரூதர்போர்டு,ஆஸ்னே தாமஸ்.