November 1, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னலையில் உள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.இந்நிலையில்,தொடரில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று கேரள திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் விண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் விண்டீஸ் அணி 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பும்ரா,கலீல் அஹ்மது தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து,105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.துவக்க வீரராகாக களமிறங்கிய ஷிகார் தவான் 6 ரன்னில் அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினர்.இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரோஹித் சர்மா 63 ரன்களும்,கோலி 33 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.