October 20, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார்(32).இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 27 விக்கெட்டும்,68 ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.
மேலும்,ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்,பெங்களூர்,ஐதராபாத் அணிகளில் விளையாடியுள்ளார்.கடைசியாக அவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.