November 29, 2018
தண்டோரா குழு
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 6 வது மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.இத்தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.இப்போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டார்.
இதற்கிடையில்,இத்தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ள மிதாலி ராஜ்,தாங்கள் வெஸ்ட்இண்டீசுக்கு சென்றதில் இருந்து பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பிசிசிஐக்கு,பயிற்சியாளர் ரமேஷ் பவார் அளித்த விளக்கத்தில்,“மிதாலி ராஜ் சொந்த சாதனைகள் செய்வதற்காகவே விளையாடுகிறார்.அணிக்காக விளையாடவில்லை.அணியின் வீராங்கனைகள் இடையே பிரிவை ஏற்படுத்துகிறார்.அனைவரின் ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.இதனால் தான் நீக்கபட்டதாக கூறியுள்ளார்.இந்நிலையில்,ரமேஷ் பவார் தன் மீது கூறிய புகார்களால் மிகுந்த வேதனையுற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மித்தாலி ராஜ் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.என் நாட்டிற்காக 20 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் விளையாடினேன்.என்னுடைய கடின உழைப்பு வீணாகிவிட்டது. இன்று,என் நாட்டுப்பற்று மற்றும் என் திறமை மீது சந்தேகம் எழுந்துள்ளது”இந்த நாள் எனது வாழ்நாளின் கருப்பு நாள்எ ன்று உருக்கமாக கூறியுள்ளார்.