May 10, 2018
தண்டோரா குழு
11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 21 பந்தில் 62 ரன்னும், பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.1 ஓவரில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.