May 9, 2018
தண்டோரா குழு
11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியைத் வீழ்த்தியது.
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது.அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.