February 18, 2017
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப், குஜராத் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இதில் இந்திய நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கான வரவேற்பு எப்போதும் எகிறியே காணப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு ([பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. வரும் ஏப்ரம் 5ல் துவங்கும் இதன் முதல் போட்டி மே 21 வரை நீடிக்கிறது. 47 நடக்கும் இத்தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கிறது.
இதில் கடந்த ஆண்டு அறிமுகமாகி அசத்திய ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி, இந்த ஆண்டு மேலும் உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் சிறந்த பீல்டராக திகழ்ந்த முகமது கைப்பை அந்த அணியின் துணை பயிற்சியாளராக அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
இதுகுறித்து அந்த அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,’ இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட மேலும் உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளோம். அதற்கு முகமது கைப்பின் வருகையும் ஒரு காரணம். அவரது வருகை மேலும் அணி வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என நம்புகிறோம். இதே நிலையை பி.சி.சி.ஐ.,யுடன் தொடர்ந்து நிச்சயம் வெளிப்படுத்தும்வோம்.’ என்றார்.