February 2, 2017
tamil.oneindia.com
ஐ.பி.எல் டி 20 கிரிகெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.
10வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 4ம் தேதி பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், வீரர்கள் ஏலம் பிப்ரவரி கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லோத்தா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலம் தாழ்த்தியதால் கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பொறுப்புகளில் இருந்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியது.
அவர்களுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்தை நிர்வாகிக்க வினோத் ராய் தலைமையில் 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நியமித்தது. இதன் காரணமாக ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும், ஏப்ரல் 5ம் தேதி தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.