April 11, 2017
tamilsamayam.com
எல் கவுனாவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா முன்னேறினார்.
எகிப்தின் எல் கவுனாவில் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, 9வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆலிசன் வாட்டர்ஸை சந்தித்தார்.
இதன் முதல் செட்டை 11-5 என வென்ற ஜோஸ்னா, அடுத்த இரண்டு செட்டையும் 7-11, 9-11 என கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட ஜோஸ்னா அடுத்த இரண்டு செட்களையும், 11-8, 11-9 என தன்வசப்படுத்தினார்.
முடிவில், இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, இங்கிலாந்தின் ஆலிசன் வாட்டர்ஸை 11-5, 7-11, 9-11, 11-8, 11-9 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.