May 12, 2017
tamilsamayam.com
பிரபல மெழுகுச்சிலை அருங்காட்சியகமான மேடம் துசாட்ஸ், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவிற்கு மெழுகு சிலை வைத்து கவுரவித்துள்ளது.
பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களை அச்சுஅசல் அப்படியே மெழுகு சிலைகளாக வடிவமைத்து உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் மேடம் துசாட்ஸ்.
இதில் இந்திய பிரதமர் மோடி, ஜாம்பவான் சச்சின், பாலிவுட பிரபலங்களான அமிதாப் பச்சான், ஷாருக் கான், ஹிரித்திக் ரோசன், ஐஸ்வர்யா ராய், ஆகியோர் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தவரிசையில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவும் இடம்பிடித்துள்ளார். இவரது சிலை டில்லியில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்இந்திய கேப்டன் கபில்தேவ் 58. இவரது தலைமையில் கடந்த 1983-ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்றது. இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகு சிலை வைக்க முடிவு செய்தது.
அதன்படி கபில்தேவ் பந்துவீசுவது போன்ற மாடலில் டில்லி அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வடிவமைத்தது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கபில்தேவ் கலந்து கொண்டு தனது சிலையை பார்த்து ஆச்சர்யப்பட்டார்.