February 24, 2017
tamilsamayam.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டான கோலி, சுமார் 104 இன்னிங்சிக்கு பின் ‘டக்’ அவுட்டாகி அதிசய சாதனை படைத்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, மேலும் ஒரு பவுண்டரி சேர்த்த நிலையில் ஸ்டார்க் (61) அவுட்டாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிசய சாதனை:
இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கோலி ‘டக்’ அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் சுமார் 104 இன்னிங்ஸ்களுக்கு பின் முதல் முறையாக ‘டக்’ அவுட்டானார்.
இவர் கடைசியாக கடந்த 2014ல் இங்கிலாந்தின் கார்டிப்பில் நடந்த ஒருநாள் போட்டியில் ’டக்’ அவுட்டானார். அதன் பின் இந்த போட்டியில் ‘டக்’ அவுட்டானார்.