January 12, 2017
tamilsamayam.com
சர்வதேச ஒருநாள் ரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு நம்பர்-1 இடத்துக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் அரங்கில் சிறப்பாக செயல்படும் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். ரோகித் சர்மா 9வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப்-10ல் இடம் பெறவில்லை. ஷிகர் தவான் 12வது இடமும், தோனி 14வது இடமும் பிடித்தனர்.
இப்பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தும் பட்சத்தில் கோலி நம்பர்-1 இடத்துக்கு முன்னேறலாம். இதேபோல ஆஸ்திரேலியாவின் வார்னர் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருக்கும் கோலிக்கும் சிறு அளவுமட்டுமே வித்தியாசம் உள்ள நிலையில், இவரும் நம்பர்-1 இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
இதேபோல சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் அக்ஷர் படேல் மட்டும் 9வது இடத்தில் உள்ளார். அமித் மிஸ்ரா 12வது இடத்திலும் அஷ்வின் 18வது இடத்திலும் உள்ளனர்.