January 20, 2017
tamilsamayam.com
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோனி சரியான நேரத்தில் ரிவியூ கேட்டு யுவராஜ் சிங்கிற்கு கைகொடுத்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கோலியுடன், கேதர் ஜாதவ் கைகொடுக்க, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கட்டாக்கில் நடக்கிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு யுவராஜ் சிங் சதம் அடித்து கைகொடுத்தார். அவர் 146 ரன்கள் எடுத்த போது வோக்ஸ் வேகத்தில் கேட்ச் அவுட் கேட்க, அம்பயர் அவுட் கொடுத்தார். உடனடியாக தோனி ரிவியூ கேட்க, பந்து பேட்டில் படாதது உறுதியானது.ரிவியூவை பயன்படுத்துவதில் தோனி கில்லாடி என இத்தொடர் துவங்கும் முன்னே தெரிவித்திருந்தார்.