April 27, 2017
tamilsamyam.com
சீனாவில் நடந்த ஆசியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் உலக சாதனைப் படைத்துள்ளார்.
சீனாவின், ஜின்ஹுவா நகரில் ஆசியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியாவின் மன்பிரீத் 18.86 மீட்டர் குண்டு எறிந்து உலக சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மிச்செல் கார்டர் என்ற வீராங்கனை ஒலிம்பிக் சாதனை வீராங்கனை 18.54 மீட்டர் எரிந்தது தான் சாதனையாக இருந்தது.
தற்போது 18.86 மீட்டர் எறிந்துள்ள மன்பிரீத் உலக சாதனைப் படைத்துள்ளதோடு, தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
வெள்ளி மகன்:
இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் 82.11 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இவர் முன்னதாக 86.48 மீட்டர் தூரம் எறிந்ததே இவரின் சாதனையாக இருந்தது.