May 10, 2017
tamilsamayam.com
ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவர் உலா வருகிறார்.
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி,29. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வழங்கும் சிறந்து கால்பந்து வீரருக்கான விருதை நான்கு முறை வென்று அசத்தியவர். தவிர கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர்.
உலக முழுதும் ரசிகர் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். ஈரானின் மாணவரான ரீசா பராதீஸ், அச்சு அசல் மெஸ்சியின் ஜெராக்ஸாக உள்ளார். சமீபத்தில் மெஸ்சியைப்பற்றி செய்தி வெளியிட்ட போது உண்மையான மெஸ்சியின் படத்துக்கு பதிலாக பராதீஸ் படத்தை வெளியிட்டது. அந்த அளவு அப்படியே மெஸ்சியைப்போலவே உள்ள இவருக்கு அதுவே வினையாக அமைந்தது.
இவர் மெஸ்சியைப்போலவே உள்ளதால், பலரும் இவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தவிர, இவர் ஈரான் வீதிகளில் நடந்து சென்றால், இவரை பொது மக்கள் சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். இதனால் வீதிகளில் அதிக டிராபிக் ஏற்படுவதாக, அந்நாட்டு போலீசார் பலமுறை இவரை எச்சரித்துள்ளனர். ஆனால் இவர், அவர்களை கண்டுகொள்வதாக இல்லை. அதனால் பராதீஸை போலீசார் கைது செய்து கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். மெஸ்சியின் தீவிர ரசிகர்களில் பராதீசும் ஒருவர்.