January 7, 2017 tamil.samayam.com
போட்டியின் தன்மைக்கு ஏற்ப பிளான் பண்னுவதில் ‘தல’ தோனி தான் ‘கிங் மேக்கர்’ என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் ‘தல’ தோனி. இவர் ஐ.சி.சி., யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை (டி-20( 2007), ஒருநாள் (2011), சாம்பியன் டிராபி (2013)) வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர். இவர், தன் மீது எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014 பாக்சிங் டே டெஸ்ட் உடன் ஓய்வு பெற்றார்.
இதே போல, டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட விராட் கோலி துடிப்பாக செயல்படுவதால், அவருக்கு தோனி வழிவிட வேண்டும் என்ற கருத்து நிலவியது. இது தொடர்பாக கடந்த 2016ல் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 உலக கோப்பையின் அரையிறுதியின் தோல்விக்கு பின் ஓய்வு குறித்து கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளரை தோனி, அருகில் அமர வைத்து விளாசி எடுத்தார்.
இந்நிலையில், இதன்பின் பேட்டிங்கிலும் தோனி தடுமாறுவதாக எழுந்த விமர்சனங்களுக்கும் நியூசிலாந்து தொடரில் திடீரென பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்கி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், தொடர்ந்து எழுந்த விமர்சனங்களால், சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் ஓய்வு முடிவை தோனி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவியது. இந்த நேரத்தில், கேப்டன் பதவியில் இருந்து விலகி தோனி அனைவருக்கும் ‘ஷாக் டிரீட்மெண்ட்’ அளித்தார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியது:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, தோனியுடன் நீண்ட நேரம் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். போட்டியின் தன்மையை உணர்ந்து செயல்படுவதில் தோனிக்கு நிகர் தோனி மட்டும் தான். அதற்கு ஏற்ப ‘பிளான்’ பண்ணுவதில் தோனி தான் ‘கிங் மேக்கர்’. என்னை பொறுத்தவரையில் கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் தோனி. டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற போது அனைவருக்கும் ஷாக் கொடுத்தவர் தோனி, இம்முறையும் அதை செய்ய அவர் தவறவில்லை. இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் தோனி ஒரு சிறந்த மனிதர்.இவ்வாறு அவர் கூறினார்.