January 11, 2017
tamilsamaya.com
இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியின்போது மைதானத்திற்கு அத்துமீறி நுழைந்த ரசிகர் தோனியின் காலை தொட்டு வணங்கிவிட்டு சென்றார்.
இங்கிலாந்து அணிக்கெதிராக இந்தியா ஏ அணி விளையாடும் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று காலை துவங்கியது.இன்றைய ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுடன் இணைந்து கேப்டன் டோனி விளையாடிக் கொண்டிருந்தார்.எப்போதும் போல நாலாபுறமும் சிக்சர்களை பறக்க விட்ட தோனியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கடும் பாதுகாப்பையும் தாண்டி,ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார்.நேராக தோனி நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தவர்,அவரின் காலை தொட்டு வணங்கினார்.அவரை அங்கிருந்த அம்பயர் தடுக்க முயற்சித்தார்.ஆனால் தோனி அதையும் மீறி அந்த ரசிகருக்கு கை கொடுக்க முயற்சித்தார்.அதற்குள் அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை வெளியேற்றினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஐம்பது ஓவர்களுக்கு 304 ரன்கள் குவித்திருந்தது.சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு 100 ரன்கள் குவித்தார்.2 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் தோனி 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 307 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.