January 28, 2017
tamilsamayam.com
டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த மும்பை மிர்ரர் பத்திரிகை சார்பாக, தொடர்ந்து 2வது ஆண்டாக, பெண்களுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
சென்ற ஆண்டில் நடத்தப்பட்ட இந்த கால்பந்து கோப்பைத் தொடரில், மேற்கிந்திய மகளிர் கால்பந்து கூட்டமைப்பு, மும்பை மாவட்ட கால்பந்து கூட்டமைப்பு, மும்பை பள்ளிகள் இடையிலான விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்டவை பங்கேற்றன.
இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் 2வது முறையாக, மகளிருக்கான கால்பந்து போட்டிகளை நடத்துவதாக, மும்பை மிர்ரர் உள்ளிட்ட போட்டி ஏற்பாட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
இதில், மும்பையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான மகளிர் கால்பந்து விளையாட்டு அணிகள் பங்கேற்கின்றன. 12 வயதுக்கு உள்பட்டோர் பிரிவு, 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவு மற்றும் 16 வயதுக்குக் கீழானோர் பிரிவு என 3 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.