April 22, 2017
tamilsamayam.com
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், கொல்கத்தா அணியின் சுனில் நரைன் முழுநேர துவக்க வீரராகவே மாறியுள்ளார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடக்கும் 23வது லீக் போட்டியில், கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதுகின்றன.
இதில் ’டாஸ்’ வென்ற குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் கிராண்ட்ஹோமேவுக்கு பதில் ஷாகிப் அணியில் இடம் பிடித்தார். குஜராத் அணியில் ஆண்டிரு டைக்கு பதில் ஜேம்ஸ் பால்க்னரும், சிவில் கவுசிக்கிற்கு பதிலாக பிரவீண் குமாரும் அணியில் இடம் பிடித்தனர்.
நரைன் நம்பிக்கை:
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, சுனில் நரைன் மீண்டும் காம்பிருடன் துவக்க வீரராக களமிறங்கினார். முதல் ஆறு ஓவர்களுக்குள் முடிந்த அளவு ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கிய நரைன், ஒரு ரன்கள் ஓடி கூட நேரத்தை வீணடிக்கவில்லை.
சுமார் 17 பந்துகளை சந்தித்த நரைன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் பவுண்டரிகள் மூலம் அதிகரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 2008ல் நடந்த ஐபிஎல் தொடரில் இலங்கையின் ஜெயசூர்யா டெக்கான் அணிக்கு எதிராக 36 ரன்கள் பவுண்டரிகள் மூலம் சேர்த்திருந்தார்.
இதன்பின் வந்த உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் காம்பிர். ஐபிஎல் அரங்கில் கொல்கத்தா அணிக்காக 2,000 ரன்கள் சேர்த்து ‘நம்பர்-1’ ஜோடி என்ற பெருமை பெற்றது.