May 24, 2017
tamilsamayam.com
அமெரிக்காவின் முன்னாள் மோட்டோ ஜிபி சாம்பியன் நிக்கி ஹேடன் விபத்தில் உயிரிழந்தார்.
பார்முலா-1 கார்பந்தயத்தைப்போல உலகம் முழுதும், நடக்கும் பைக் ரேஸ் மோட்டோ -ஜிபி. இதன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் நிக்கி ஹேடன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் கடந்த வாரம் தனது சைக்கிளில் சென்ற போது, அவரின் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஹேடன் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், 5 நாட்களாக போராடி சிகிச்சை பலன் இல்லாமல் இன்று உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2006ல் வெலன்சியாவில் நடந்த மோட்டோ ஜிபி பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.