April 10, 2017
tamilsamyam.com
குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா விரைவில் அணிக்கு திரும்புவார் என அந்த அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் கோலகலமாக துவங்கியது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் ஆறாவது லீக் போட்டியில் குஜராத், ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் ஐதராபாத் அணி, குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பங்கேற்ற இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த குஜராத் அணி, அதன் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் கூறுகையில்,
அணியில் தவறவிடக்கூடாத ஆட்களில் ஒருவர் ரவிந்திர ஜடேஜா. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என எல்லா விதத்திலும் உதவியாக இருப்பார். அதனால் எவ்வளவு சீக்கிரமாக அவரை அணிக்கு திரும்ப வைக்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரமாக அவரை அணியில் சேர்க்க முயற்சிப்போம், என்றார்.