February 14, 2017
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பல்லாயிரம் கேள்விக்கு ஒரே வரியில் பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைப்பயணத்தை படமாக எடுப்பது தான் தற்போது பாலிவுட் டிரெண்டாக உள்ளது. இதில் இந்தியாவின் வெற்றிக்கேப்டனாக ஜொலித்த தோனியின் வாழ்க்கைப்பயணம் படமாக எடுக்கப்பட்டு பட்டையை கிளப்பியது.
அவரை தொடர்ந்து முன்னாள் கேப்டன் அசாருதின் படம் வெளியானது. அதேபோல் கேன்சரில் இருந்து மீண்டு கிரிக்கெட் களத்துக்கு திரும்பிய யுவராஜ் சிங்கின் கதையும் விரைவில் படமாகவுள்ள நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சச்சின், குறித்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த படம் வெளியாகும் தேதியை சச்சினே இன்று தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் மே 26, 2017ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒவ்வொருவரும் இது வரை என்னிடம் கேட்ட கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது. இந்த தேதியை உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.