March 30, 2017
tamil.samayam.com
தன்னுடைய ரசிகர்களுக்காக “100 எம்.பி” என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை சச்சின் டெண்டுல்கர் உருவாக்கியுள்ளார்.
100 எம்.பி என்பதன் விரிவாக்கம் “100 மாஸ்டர் பிளாஸ்டர்” என்பதாகும். சச்சினின் 100 கிரிக்கெட் சதங்களை மனதில் வைத்து இந்த ஆப்பிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் குறித்து கடந்த மார்ச் 27-ஆம் தேதி டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த டீசரில் சச்சினே தோன்றி,”என்னை பற்றிய மேலதிக தகவல்களை பெற இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது.” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று 100 எம்.பி அப்ளிகேஷனானது மும்பை கிரிக்கெட் கிளப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனுக்காக பிரபல ஹிந்தி பாடகர் சோணு நிகமுடன் இணைந்து புதிய பாடல் ஒன்றை சச்சின் உருவாக்கியுள்ளார்.