September 10, 2018
தண்டோரா குழு
நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸூக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 138வது யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடைப்பெற்றது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நயோமி ஒசாகா விளையாடினர்.இதில் நயோமி ஒசாகாவிடம் செரினா வில்லியம்ஸ் 2-6, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.இதன் மூலம் ஜப்பானின் நயோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில்,நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸூக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதில் ரூ.2,88,860 வெளியில் இருந்து பயிற்சி பெற்றதுக்காகவும்,ரூ.2,16,645 டென்னிஸ் ராக்கெட்டை வீசியதற்காகவும்,ரூ.7,22,150 சேர் நடுவரை திருடன் என்று கூறியதற்காகவும் என மொத்தமாக ரூ. 12,27,655 அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு அபராதம் விதித்துள்ளது.