February 28, 2017
tamilsamayam.com
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரின் வர்ணணையாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் விலகியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி,படுமோசமான தோல்வியை சந்தித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களுருவில் நடக்கிறது.
இத்தொடரின் வர்ணனையாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் உள்ளார். இந்நிலையில் திடீரென அவரது சொந்த விஷயங்கள் காரணமாக அமெரிக்க செல்வதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.