February 17, 2017
tamilsamayam.com
இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், உஸ்மான் கவாஜாவுக்கு பதில் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (பிப்ரவரி 23-27) புனேயில் நடக்கிறது. அடுத்த 3 போட்டிகள் பெங்களூரு (மார்ச் 4-8), ராஞ்சி (மார்ச் 16-20), தரம்சாலாவில் (மார்ச் 25-29) இடங்களில் நடக்கவுள்ளது.
இத்தொடருக்கு முன், மூன்று நாட்கள் கொண்ட இந்திய “ஏ” அணிக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. இந்த பயிற்சி போட்டி மும்பையில் இன்று துவங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியில் இலங்கை தொடரின் போது சோபிக்க தவறிய உஸ்மான் கவாஜாவை, பயிற்சி போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணி கழட்டிவிட்டுள்ளது.
இவருக்கு பதிலாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் வார்னர் (25) ஏமாற்றினார். கேப்டன் ஸ்மித் அரைசதம் கடந்தார். முதல் நாள் உணவு இடைவேளைக்கு பின் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.