February 27, 2017
tamilsamayam.com
பெங்களுருவில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கடினமாக திருப்பிக்கொடுக்க தயாராக உள்ளதாக,’ ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி,படுமோசமான தோல்வியை சந்தித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களுருவில் நடக்கிறது.
இதில் இந்திய அணி மீண்டு வரும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,’ புனே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீதம் சரியாக செயல்பட்டது என சொல்லவில்லை. ஆனால் எல்லாத்தையும் சரியாக செய்தோம் என்பது மட்டும் உறுதி. இனி போகும் பாதை நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும் என தெரியும். நம்பர்-1 அணியான இந்திய அணி, அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது. குறிப்பாக சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் தோல்வியை சந்திக்கும் போது அதன் விளைவு எவ்வளவு கடினமான காரியம் என தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்,’ என்றார்.