April 29, 2017
tamilsamayam.com
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மொஹாலியில் நடந்த 33வது லீக் போட்டியில், ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
தவான் அரைசதம்:
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, வார்னர் (51), தவான் (77), வில்லியம்சன் (54*) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, ஐதராபாத் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
மார்ஷ் பிராமாதம்:
கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு டாப் ஆர்டர் வீரர்களான கப்டில் (23), வோஹ்ரா (3), கேப்டன் மேக்ஸ்வெல் (0) என சொதப்ப, மார்ஷ் (84) அரைசதம் அடித்து அசத்தினார். பின்வரிசை வீரர்கள் சொதப்ப, பஞ்சாப் அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.