February 23, 2017
tamilsamayam.com
புனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில், முதல் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.
முதல்முறையாக, புனேவில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், இதை நினைவுகூறும் விதமாக, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. புனே கிரிக்கெட் சங்க நிர்வாகி, வினோத் ராய் வெளியிட, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறப்பு தபால் தலை பிரதியை பெற்றுக் கொண்டார்.
புனே மைதானத்தில் ஏராளமான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் இதுவரை நடைபெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.