February 12, 2017
tamilsamayam.com
என் இத்தனை ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கயில் இப்படி ஒரு வேகத்தை பார்த்ததே இல்லை,’ என உமேஷ் யாதவ் குறித்து வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. ஹைதராபாத்தில் நடக்கும் இந்த டெஸ்டில், இந்திய அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 687 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி, 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்திருந்தது.
இதில் வங்கதேச அணிக்கு 82 ரன்கள் அடித்து கைகொடுத்த ஷாகிப் அல் ஹாசன், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் உமேஷ் யாதவின் வேகத்தை போல எதிர்கொண்டது கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து ஷாகிப் கூறுகையில்,
உமேஷ் யாதவ் உண்மையிலேயே மிரட்டுகிறார். உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். என் வாழ்நாளில் இப்படி ஒரு வேகத்தை எதிர்கொண்டது கிடையாது. அவர் வேகத்துடன் சுவிங் செய்யும் முறை கணிக்க மிகவும் கடினமாக இருந்தது. ஐ.பி.எல்., போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடியதால் அவரின் திறமை என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். என்றார் .