February 10, 2017
tamilsamayam.com
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி, சாதனை மழையில் நனைந்தார்.
டெஸ்ட் அரங்கில் தனது 4வது இரட்டைசதத்தை பதிவு செய்த கோலி, டெஸ்ட் அரங்கில் அடுத்ததடுத்த தொடரில் 4 இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டான் பிராட்மேன், இந்தியாவின் டிராவிட் மூன்று தொடர்களில் இரட்டைசதம் அடித்துள்ளனர்.
4 இரட்டை சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் லாரா, பிராட்மேன், மைக்கேல் கிளார்க், ஸ்மித் ஆகியோருக்கு பின் கோலி 5வது கேப்டன் என்ற பெருமை பெற்றார்.
தவிர , ஒரே சீசனில் மூன்று இரட்டை சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் கோலி 6வது இடம் பிடித்தார்.
இதற்கு முன்
டான் பிராட்மேன் (ஆஸி.,, 1936-37)
கிரேம் ஸ்மித் (தென் ஆப்ரிக்கா, 2003)
பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ், 2003,04)
மைக்கேல் கிளார்க் (ஆஸி., 2011-12, 2012-13)
பிரண்டன் மெக்கலம் (நியூசி., 2013-14)
கோலி (இந்தியா, 2016-17)