January 21, 2017
tamilsamayam.com
ஜல்லிக்கட்டுக்கு அமைதியான முறையில் போராடிய தமிழர்களை தமிழிலேயே முன்னாள் அதிரடிவீரர் சேவக் பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் சேவக். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தனது டுவிட்டர் மூலம் சமூகத்தில் மக்கள் மத்தியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முன்பே ஆதரவு தெரிவித்த சேவக், தற்போது தனக்கும் தமிழ் மீது உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் அமைதியான முறையில் போராடிய தமிழர்களுக்கு தமிழிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், “அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன்”. அமைதியை தொடருங்கள். அன்புடன் “#Jallikattu” என அதில் குறிப்பிட்டுள்ளார்.